Home / 2017

Yearly Archives: 2017

சிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017

DSC03216

20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெய்வீகத் திங்களிதழாக நடந்து வருகின்ற ஆலயதரிசனம் குழுவினர், மாத இதழை மட்டும் வெளியிட்டுவரும் பணிகளின்றி பல நல்ல நூல்களையும் பதிப்பித்து வருகின்றனர். தவிர, பல்வேறு ஆன்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாவை உபன்யாஸம், திருக்கல்யாண உற்சவங்கள், ததீயாராதன வைபவங்கள், திருக்கோயில்களுக்கான அறக்கொடைகள் எனப் பல்வேறு தளங்களில் பணிகளை ஆற்றிவரும் ஆலயதரிசனம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரத்தில் ஸ்ரீராமநவமி இசைவிழாக் குழு ஒன்றினை அமைத்து ஸ்ரீராம …

Read More »

மதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா

Jeer Swamis

நாள்: 16.04.2017 ஞாயிறு மதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா ஆர்த்தி ஹோட்டல் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவைஒட்டி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமாந் மு.வெ.இரா. ரங்கராஜன், அமைப்பாளர், திருமால் அடியார் குழாம் மதுரை, அவர்களின் வரவேற்புடன் விழா தொடங்கியது. மதுரைப் பேராசிரியர் டாக்டர்.அரங்கராஜன் ஸ்வாமி அவர்களின் தலைமையில், ஸ்ரீரங்கம் ஸ்ரீபெரியநம்பிகள் திருவம்சம் ஸ்ரீமான் உ.வே. சுந்தரராஜாசார்யார் ஸ்வாமி மங்காளாசாஸனத்தின் …

Read More »

ராமானுஜருக்கு என்ன பெருமை?

Ramanuja Thirukoshtiyur1

  ராமானுஜருக்கு என்ன பெருமை? அனைத்துலகும் வாழப்பிறந்தவர் இராமாநுஜர். இராமாநுஜரின் 1000-வது ஆண்டுவிழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இராமாநுஜரை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் பல இதழ்களிலும் பல்வேறு தலைப்புகளிலே கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இராமாநுஜரை உள்ளபடி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இந்தக் கட்டுரைகள் துணை போகின்றனவா என்றால் கொஞ்சம் ஐயமாகவே இருக்கின்றது.புகழ்பெற்ற எழுத் தாளர்கள் இராமாநுஜரைப் பற்றி எழுதும்போது அதீதமான கற்பனையிலே தாங்கள் விரும் பியபடி …

Read More »

சீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்

  சீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் – பிரதமர் மோடி உருக்கம்  சமூக சீர்திருத்தவாதியும், வைணவத் துறவியுமான ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தில் அவரது தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர், என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வைணவத் துறவி: ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு தபால் …

Read More »

செய்திகள் – ஏப்ரல் 2017

பு.முட்லூரில் ஸ்ரீ ராமநவமி விழா பு.முட்லூர் ஸ்ரீராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளையின் சார்பில் இராமநவமி பிரம்மோற்சவம் 5.4.2017 முதல் 15.4.2017 வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற இருக்கிறது 15.4.2017 சனிக்கிழமை அதிகாலை பட்டாபிஷேகத்தோடு நிறைவு பெற உள்ளது. தினசரி சொற்பொழிவுகள், இசை நிகழ்ச் சிகள் நடைபெற இருக்கின்றன றன. கடைசி ஐந்து தினங்கள் தினசரி 6 மணி முதல் 8 மணி நேரத்திற்குக் குறையாமல் இராமாயணம் நாடகம் …

Read More »

மாசி மகம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்

மாசி மகம் என்பது மாசி மாதத்தையும் மக நட்சத்திரத்தையும் இணைத்துக் குறிக்கும் தொடர். ஆனால், இந்த மாத நட்சத்திர சேர்க்கையே ஓர் புனிதமான திருவிழா என்பது வியப்புக்குரியது. மாசி என்பது கும்ப மாதம். கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் கும்பத்திலிருந்து தன் ராசியான சிம்ம ராசியைப் பார்க்கும் காலத்தில் அந்த ராசியிலுள்ள சந்திரன் மக நட்சத்திரத்தில் இணைகிறது. இந்தச் சந்திப்புக் காலத்தில், கோயில்களில் உள்ள உற்சவமூர்த்திகள் தீர்த்தவாரி …

Read More »

திருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை ?

Yaen Thirumanam copy

திருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை ? தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் சென்று பேசி வருகிறேன். பல்வேறு மக்களிடமும் பேசி வருகிறேன். எல்லோருக்கும் உள்ள கவலைகளில் மிகப்பெரிய கவலை தங்கள் பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்கிற கவலை. குறிப்பாக மிடில் கிளாஸ் என்று அழைக்கப்படும் பொருளாதார இடைநிலை மக்களிடம் சமீப காலமாக இந்த கவலை அதிகரித்துக் கொண்டே போகிறது. பொருளாதாரத்தில் சற்று கீழே உள்ள மக்களிடம் பெரும்பாலும் இந்தக் …

Read More »

அலகிலா விளையாட்டு – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்

Hanuman003

அலகிலா விளையாட்டு  – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார் ஏப்ரல் 2017 வெற்றி தோல்வி என்பது என்ன? இரண்டும் ஒரு செயலின் விளைவுகள்! அனுமனும் இராவணனும் கம்பன் வழிப்படி முதல் நாள் போரிலே மோதுகிறார்கள். போர் என்றால் போர் வீரர்கள் யானை, குதிரை, தேர் முதலியன கொண்டு போரிடுவார்கள். வில் அம்பு கொண்டு எதிர்ப்பார்கள். அனுமனோ தனியான போராளி! வில்லும் இல்லை! அம்புமில்லை; கதை மட்டும் உண்டு என்று கூறப்படுகின்றது. இராவணனும் …

Read More »

சத்சங்கம் – கேள்வி பதில் ஏப்ரல் 2017

poor people for food in india

கேள்வி: சில பொன்மொழிகள் இன்றைக்கு வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம்படி ஆகிவிட்டதே? பதில்: உண்மைதான். பொன்மொழியின் அமைப்பும், நோக்கமும் மாறவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலை வேறுவிதமாக அர்த்தம் கொள்ளும்படி செய்து விடுகிறது. உதாரணமாக விவேகாநந்தர் சொன்னது: முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். எஜமானன் ஆகும் தகுதி தானாகவே வந்து விடும். இன்றைய அரசியல் சூழலுக்கு இந்தப் பழமொழி எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள். வேலைக்காரர்களாக இருந்த பலர் இன்று எஜமானர்களாகி விட்டார்களே! அன்பு …

Read More »

விளையாட்டே வினையானதே

Vilayayae Vinayanadhu copy

விளையாட்டே வினையானதே  பாவலர். மணி சித்தன், புதுவை. இராமன் சிறுவனாயிருந்த காலம். ஒரு நாள் கையில் சிறு வில்லும் மண்ணுருண்டையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அரசி கைகேயியின் பணிப் பெண்ணாகிய கூனி (மந்தரை) அவ்வழியிற் லெ்ல அவள் கூன் முதுகில் விளையாட்டாக இராமன் உண்டை வில்லால் அடித்தான். அவள் துடித்தாள். இது சிறுபிள்ளை விளையாட்டென அவள் கருதினாள் அல்லள். நெஞ்சில் வஞ்ம் கொண்டாள். இராமன் அரகுமாரன் ஆதலால் தன் …

Read More »
error: Content is protected !!