Home / 2016 / July

Monthly Archives: July 2016

வாழ்வியல் சடங்குகள்

Vazhviyal Sadangugal copy

நம்முடைய வைணவ மரபில் சில சடங்குகள் மட்டுமல்ல. எல்லாச் சடங்குகளும் அர்த்தம் பொதிந்தவை. ஆழ்வார்களின் பாசுர விளக்கங்களோடு, தமிழ் மறையாகிய ஆழ்வார்களின் அருந்தமிழ் கொண்டும் அவற்றை எளிமையாக நடத்தி நலம் பெறலாம். நல்ல உள்ளமும், உள்ளத்தில் தோன்றும் எண்ணமும் தான் முதல் தூய்மையாக இருக்க வேண்டும். எந்தச் சடங்காக இருப்பினும் ஆரவாரமும், வீண் ஆடம்பரமும் தவிர்க்கப்பட வேண்டும். ஆழ்வார் பாசுரங்களில் பலச்ருதி பாசுரங்கள் பல உண்டு. அவற்றில் நாம் பிரார்த்திக்கும் …

Read More »

செய்திகள் சில வரிகளில் ஜூலை 2016

வருஷாபிஷேக மற்றும் நாமசங்கீர்த்தன பஜன் மேளா வீரவநல்லூர், வடக்கு மேட்டுத்தெரு, ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஆதிநாராயணர் திருக்கோயிலில் நான்காவது வருஷாபிஷேகம், நாமசங்கீர்த்தன பஜன் மேளா மற்றும் வைணவ ரத்னா குலசேகர ராமானுஜதாசன் (எ) விஜயரங்கனின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா ஆகியவை 2.7.2016, 3.7.2016, 4.7.2016 ஆகிய தினங்களில் வீரவநல்லூர் வடக்கு மேட்டுத் தெரு இந்திரா ஆங்கிலப்பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு பஜனை குழுக்களின் பஜனையும், ராம்கிருஷ்ண ஹரி அகண்ட நாம ஜெபமும், …

Read More »

Dr.VLV சுதர்சனின் North to South

VLV North to South copy

சென்னை – ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் 30.6.2016 வியாழக்கிழமை மாலை 6.15 முதல் 8.15 வரை, சிதம்பரம் வேதகமலம் அமைப்பின் சார்பில் முத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதிகளைக் கொண்டு, அருமையான ஓர் இசை நிகழ்ச்சி வயோலாவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் Dr.V.L.V சுதர்சன் அவர்கள் வயோலா இசைக்க, திரு.Y. சத்திய நாராயணா பக்கவாஜ் வாத்தியத்தையும், திரு.S.விஜேந்திரன் அவர்கள் மிருதங்கமும், திரு.B.V.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் கடமும் வாசித்தனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து அறிமுக உரையை ஆலயதரிசனம் ஆசிரியர் …

Read More »

ஸ்ரீ ராமானுஜரின் திருநாம வைபவம் – உடையவர் தாசன்

Ramanujar 01 T

பெரும்புதூர் கருணையங்கடல் ஸ்ரீ ராமானுஜரின் திருநாம வைபவம்  உடையவர் தாசன், விஜயரெங்கபுரம் ஸ்ரீபாஷ்யக்காரர்: ஸ்ரீமந் நாதமுனிகளின் திருப்பேரனார் ஸ்ரீஆளவந்தார் என்ற யாமுனாச்சார்யர் திருநாடு அலங்கரித்தார். அவருடைய பூதத் திருமேனியை வடதிருக்காவேரிக்கரையில் பள்ளிப்படுத்த ஏற்பாடாகியது. அந்த சமயத்தில்தான் ஸ்ரீஆளவந்தாரின் நியமனத்திற்கிணங்க பகவத் இராமானுஜரை திருவரங்கத்திற்கு அழைத்துவரச் சென்ற ஸ்ரீபெரியநம்பிகள் பகவத் இராமானுஜருடன் திரும்பினார். இருவரும் ஸ்ரீஆள வந்தாரின் பூதத்திருமேனியை மட்டுமே தரிசிக்க நேர்ந்தது. அப்பொழுது அவருடைய மூன்று விரல்கள் மடங்கியிருந்தன. அதன் …

Read More »

விபீஷணன் யார் ? ஜூலை17

Vibishanan J17

   விபீஷணன் யார் ? வான்மீகியின் விபீஷணனைப் பற்றிய மதிப்பீட்டை கம்பன் அப்படியே அங்கீகரிக்கிறான். வான்மீகி விபீஷணனை பிரஹஸ்பதி – குருவைப் போன்ற புத்தி படைத்தவன் என்றார். கம்பர், “மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்” என்று பேசுகிறார்.(இரணி. வதை . படலம். 305). கூர்மையான அறிவு இருந்தால் மட்டும் போதாது. நல்ல குணங்களும் நிரம்பியவனாக இருக்க வேண்டும். எனவே மேன்மையான் என்ற பதத்தைக் கம்பன் போடுகிறான். ஒருவன் நல்லவன் என்பதைத் தெரிந்து …

Read More »

கண்ணன் அருள்

kannan arul

கண்ணன் அருள் – கே. பி .பத்பநாபன் . கோவை வசுதேவரின் மனைதேவகி கடுஞ்சிறைதனி லிரவில் விசும்பிடைபெரு இடிமழையது பொழிந்திடுகிற நேரம் *அசுடமி திதி ரோகிணிதனை அரவணைத்திடும் போழ்தில் சிசுவெனஒளிர் சிறுகண்ணனைச் சிந்தனையுடன் பெற்றாள்; இருளொடுபுயல் இடிமழையென இடர்பலஇருந் தாலும் உருவினில்சிறு கண்ணனுமிவண் உலகினில்வரும் நேரம் கருகருமுகி லிடைமின்னிடு ஒளிமின்னலைப் போலத் திருஅருளொளி திசையெங்கனும் திகழ்ந்திடுதலைக் கண்டார்; மனம்முழுவதும் மாசுடையொரு கொடுமாமனாம் கம்சன் சினநெஞ்சொடு சிலகணங்களுள் சிறைதனில்வரும் முன்னர் அனந்தனும்குடை …

Read More »

சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம்

Lord KrishnaHL

கண்ணன் பிறந்தான் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் இந்த நிகழ்ச்சியை அழகிய மணவாள தாசர் என்று போற்றப்படும் பிள்ளைபெருமாள் ஐயங்கார் நினைந்து நினைந்து நெஞ்சுருகிப் பாடுகிறார். “சிந்திக்க நெஞ்சில்லை நாவில்லை நாமங்கள் செப்ப     வந்திக்க மெய்யில்லை வந்துமிருபோதும் மொய்ம்மா மலர்ப்  பூம்     பந்தித் தடம்புடை சூழ் அரங்கா! ததிபாண்டன் உன்னைச்     சந்தித்த நாள் முக்தி பெற்ற தென்னே தயிர்த் தாழியுமே” இந்த ஸ்வாமி திருவரங்கத்தில் அரங்கனுக்கு அர்ச்சனைக் …

Read More »

இந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா?

Nungambakkam-railway-station

இந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா? கர்நாடகாவில் ஒரு பேராசிரியர். அவர் ஒரு புதுவிதமான குற்றச்சாட்டை பரபரப்பாகச் சுமத்தியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டை உடனே எல்லாப் பத்திரிகைகளும் பரபரப்போடு வெளியிட்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. அவர் வைத்த குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா? மத்திய மாநில மந்திரிகள் மீது அல்ல; வேறு உயிரோடு இருக்கும் பிரபலங்கள் மீது அல்ல; ராமர் மீது! எந்த இராமர் என்று கேட்கிறீர்களா? அதுதான் இராமாயணத்தில் வருவாரே, …

Read More »

இன்பம் வருவதற்கு என்னே வழி ?

Sathsangam01 copy

கேள்வி: இன்றைய உலகம் எப்படி இருக்கிறது? பதில்:     கெட்டவர்களாக வாழ்வதைவிட நல்லவர்களாக வாழ்வ தற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதிகம் முயற்சி வேண்டி யிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. ஆனால், மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனையே இதுதான்! ஆனாலும் இதிலும் சில குறுக்கு வழிப்பேர்வழிகள் உண்டு. எல்லோரையும் விமர்சனம் செய்வதும், நேர்மையாளர்களைப் போல் பேசுவதும் நடக்கிறது. நாம் மற்றவர்களை விமர்சிப்பதாலும் – சரியில்லை என்று சொல்வதாலும் மட்டுமே நல்லவர்களாகி விட …

Read More »

சிசுபாலனுக்கு மோக்க்ஷம்

Kannan Pirandhan APL 16

சிசுபாலனுக்கு  மோக்க்ஷம் விதர்ப நாட்டு அரசன் பீஷ்மகன். இவனுக்கு மஹாலக்ஷ்மியே பெண்ணாகப் பிறந்திருந்தாள். ருக்மிணி என்று பெயர் சூட்டினர்.அரண்மனைக்கு வருகை தரும் முனிவர்கள் மூலம் கிருஷ்ணனின் அவதாரம் பற்றியும், கிருஷ்ண லீலைகளையும் கேட்டு கிருஷ்ணனே தன் கணவன் என்று முடிவு செய்தாள். இவளுக்கு ஐந்து சகோதரர்கள். மூத்தவன் ருக்குமி. கம்சனின் நண்பன். கிருஷ்ணனே கம்சனை அழித்தவன் என்பதால் கிருஷ்ணனின் மீது வெறுப்பு. தன் சகோதரியை மணம் செய்து கொள்வதா? மறுத்தான். …

Read More »
error: Content is protected !!